காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது: நூல் வெளியீட்டு விழாவில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டு
காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டியுள்ளார்.

திருப்பதி: காஞ்சி மகாஸ்வாமியின் உபதேச மொழிகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ‘தி இந்து’ குழுமத்தின் பங்கு அளப்பரியது என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டியுள்ளார்.
‘தி இந்து’ பதிப்பக குழுமம் சார்பில் ‘உண்மையின் அவதாரம் - காஞ்சி மகாஸ்வாமி’ நூல் வெளியீட்டு விழா, காஞ்சி சங்கர மடத்தின் திருப்பதி கிளையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இரண்டு தொகுதிகளைக் கொண்ட இந்நூலை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தின் (திருப்பதி) முதுநிலை பேராசிரியர் தேவநாதாச்சாரியார் பெற்றுக் கொண்டார். நூலின் இரண்டாவது பிரதியை இன்டக்ரேட்டட் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் பி.வைத்யநாதன் பெற்றுக் கொண்டார்.
What's Your Reaction?