கருணையுடன் ஈர்ப்பவன் கோவிந்தன்...! | மார்கழி மகா உற்சவம் 27
பகைவரை வென்று சீருடன் விளங்கும் கோவிந்தா! உன்னை வாயாரப் பாடி, மனதார நினைத்து, வேண்டும் பறையைப் பெற்று நாடு புகழும்படியான ஆடை, ஆபரணங்களையும், அணிமணிகளையும் சன்மானமாகக் கேட்பதே நாங்கள் பெறும் பயன்களாகும்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன்தன்னைப் |
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்; ||
நாடு புகழும் பரிசினால் நன்றாக, |
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே ||
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; |
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பால்சோறு ||
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக் |
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 27)
What's Your Reaction?