திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்.22-ம் தேதி சென்னையில் தொடக்கம்

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து வரும் 22-ம் தேதி தொடங்குகிறது

Sep 14, 2025 - 11:20
 0  3
திருப்பதி திருக்குடை ஊர்வலம் செப்.22-ம் தேதி சென்னையில் தொடக்கம்

இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் 21-வது ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்னகேசவப் பெருமாள் கோயிலில் இருந்து வரும் 22-ம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து டிரஸ்ட் அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் கருடசேவைக்காக தமிழகத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர் மாலை, வெண்பட்டு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow