சபரிமலை ஆன்லைன் பக்தர்களிடம் தலா ரூ.10 திரட்ட முடிவு - உயிரிழக்கும் பக்தர்கள் குடும்பத்துக்கு உதவ திட்டம்
சபரிமலையில் இதய பாதிப்பு போன்றவற்றினால் உயிரிழக்கும் பக்தர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆன்லைன் பக்தர்கள் மூலம் தலா ரூ.10 வீதம் விருப்ப நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

குமுளி: சபரிமலையில் இதய பாதிப்பு போன்றவற்றினால் உயிரிழக்கும் பக்தர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆன்லைன் பக்தர்கள் மூலம் தலா ரூ.10 வீதம் விருப்ப நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
ஐயப்பன் கோயிலுக்கான பெரும்பாலான பாதைகள் வனத்திலே அமைந்துள்ளன. இதில் செங்குத்தான ஏற்றம், பள்ளம் நிறைந்து இருப்பதுடன் கரடுமுரடான பாதையாகவும் உள்ளது. இதனால் பலரும் சபரிமலையின் அடிவாரமான பம்பை வரை வாகனத்தில் வந்து பின்பு சந்நிதானத்துக்கு சுமார் 7கிமீ. மலைச்சாலையில் ஏறிச் செல்கின்றனர். உடல்நலம் குன்றியோர், மத்தியவயதை கடந்தவர்களுக்கு இது சவாலாக இருக்கிறது. இருப்பினும் பக்திபரவசத்துடன் செல்வதால் இவர்களுக்கு சிரமம் தெரிவதில்லை.
What's Your Reaction?