புரட்டாசி கடைசி சனிக்கிழமை: தூத்துக்குடி நவதிருப்பதி தலங்களில் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று (அக்.12) பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Nov 11, 2024 - 15:43
 0  4
புரட்டாசி கடைசி சனிக்கிழமை: தூத்துக்குடி நவதிருப்பதி தலங்களில் பக்தர்கள் தரிசனம்

தூத்துக்குடி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று (அக்.12) பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று (அக்.12) நவதிருப்பதி ஸ்தலங்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான், நத்தம் விஜயாசனார், திருப்புளியங்குடி காசினிவேந்தன், பெருங்குளம் மாயகூத்தப்பெருமாள், இரட்டைத் திருப்பதி தேவர்பிரான், அரவிந்தலோசனர் பெருமாள், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் ஆகிய நவதிருப்பதி கோயில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு கோஷ்டி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow