வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்: திருத்தணியில் சுப்பிரமணியருக்கு புஷ்பாஞ்சலி

கந்த சஷ்டி விழாவை முன்​னிட்டு வடபழனி முரு​கன் கோயி​லில் சூரசம்​ஹாரம் நேற்று நடந்​தது. அரோகரா கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Oct 28, 2025 - 08:45
 0  3
வடபழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்: திருத்தணியில் சுப்பிரமணியருக்கு புஷ்பாஞ்சலி

சென்னை / திருத்தணி: கந்த சஷ்டி விழாவை முன்​னிட்டு வடபழனி முரு​கன் கோயி​லில் சூரசம்​ஹாரம் நேற்று நடந்​தது. அரோகரா கோஷத்​துடன் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்​தனர். திருத்​தணி சுப்​பிரமணி​யர் கோயி​லில் புஷ்​பாஞ்​சலி நடை​பெற்​றது. சென்னை வடபழனி முரு​கன் கோயி​லில் மகா கந்த சஷ்டி விழா கடந்த 21-ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகன புறப்​பாட்​டுடன் தொடங்​கியது.

அக். 22-ம் தேதி முதல் லட்​சார்ச்​சனை தொடங்​கியது. தொடர்ந்​து, தினசரி காலை, மாலை​யில் இரு​வேளை​யும் பூஜைகள், சுவாமி வீதி உலா​வும் நடந்​தது. விழா​வின் பிர​தான நாளான நேற்​று, உச்சி காலத்​துடன் லட்​சார்ச்​சனை நிறைவு பெற்​றது. அதனை தொடர்ந்து தீர்த்​த​வாரி உற்​சவம் நடந்​தது. மாலை 5.30 மணிக்கு அம்​பாளிடம் வேல் பெற்​று, சூரபத்​மனை வதம் செய்ய முரு​கப் பெரு​மான் புறப்​பட்​டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow