திருச்சி: திருவானைக்காவலில் இன்று பங்குனி தேரோட்டம்

திருவானைக்காவலில் பங்குனி தேரோட்டம் இன்று காலை 7.20 மணிக்கு தொடங்கியது. தேர் திருவிழாவையொட்டி திருவானைக்காவல் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. 

Mar 30, 2025 - 14:55
 0  3
திருச்சி: திருவானைக்காவலில் இன்று பங்குனி தேரோட்டம்

திருச்சி: திருவானைக்காவலில் பங்குனி தேரோட்டம் இன்று (மார்ச் 30) காலை 7.20 மணிக்கு தொடங்கியது. தேர் திருவிழாவையொட்டி திருவானைக்காவல் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படக்கூடியது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும், பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் பெருவிழா பிரசித்திப் பெற்றது. அதன்படி நிகழாண்டு பங்குனி பெருவிழா கடந்த மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றுத்துடன் துவங்கியது. பங்குனித் தேரோட்டத்தை முன்னிட்டு 18-ம் தேதி ஸ்வாமி தேருக்கும், அம்மன் தேருக்கும் முகூர்த்தக்கால்கள் நடும் வைபவம் நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow