சபரிமலையில் வழிதவறும் குழந்தைகள், ஞாபகமறதி பக்தர்களை 'மீட்டெடுக்க' கைப்பட்டை அறிமுகம்
ஞாபசக்தி பிரச்னை, நினைவு தடுமாற்றம் உள்ள வயோதிக பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சபரிமலையில் வழிகாட்டி கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது.

தேனி: ஞாபசக்தி பிரச்சினை, நினைவு தடுமாற்றம் உள்ள வயோதிக பக்தர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் சபரிமலையில் வழிகாட்டி கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது. வழிதவறியவர்களை இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்களிடம் எளிதாக ஒப்படைக்க முடியும் என்று தேவசம் போர்டு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டு மண்டலபூஜை வழிபாட்டுக்காக கடந்த 15-ம் தேதி மாலை நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர். நெரிசலை குறைப்பதற்காக தினமும் 18மணிநேரம் நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அதிகபட்சமாக தினமும் 80ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
What's Your Reaction?