சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்  நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சிவசிவா முழக்கத்துடன் வடம் பிடித்தனர். 

Jan 12, 2025 - 14:30
 0  4
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

கடலூர்: உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் இன்று நடந்தது. சிவ சிவா என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி சுவாமிகள் வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா நடைபெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow