சரஸ் மேளாவில் மகளிர் குழுக்களின் தயாரிப்புகள் ரூ.1 கோடிக்கு விற்பனை
சென்னையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்திய சரஸ் மேளா கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.1 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

சென்னை: சென்னையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்திய சரஸ் மேளா கண்காட்சியில் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் ரூ.1 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சரஸ் மேளா விற்பனை கண்காட்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த டிச.27-ம் தேதி தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், பிஹார், மேற்கு வங்காளம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் உள்ள சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்கள் 120 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
What's Your Reaction?