சங்கரன்கோவில் கோமதி அம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
‘ஹரியும், ஹரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்த இருவரையும் வேண்டி அன்னை பார்வதிதேவி தவமிருந்த தலம் சங்கரன்கோவில். இத்தலத்தில் கோமதி அம்மனாக அன்னை வீற்றிருக்கிறாள்.

‘ஹரியும், ஹரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்த இருவரையும் வேண்டி அன்னை பார்வதிதேவி தவமிருந்த தலம் சங்கரன்கோவில். இத்தலத்தில் கோமதி அம்மனாக அன்னை வீற்றிருக்கிறாள். திருமாலும், சிவபெரு மானும் இணைந்து, சங்கரநாராயணராக ஒரே ரூபமாக காட்சி தர வேண்டி, கோமதி அம்மன் தவத்தில் இருந்தாள்.
ஆடி மாதம் பவுர்ணமி திதி உத்திராட நட்சத்திர தினத்தில் அன்னை கோமதிக்கு சங்கரநாராயண தரிசனம் கிட்டியது. இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடித்தபசு பிரம் மோற்சவம் நடைபெறுகிறது. இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு, 10 நாட்கள் காலையிலும், மாலையிலும், இரவிலும், அன்னை வீதி உலா வருகிறாள்.
What's Your Reaction?