சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர், குழந்தைகள் தரிசனம் செய்ய தனிப்பாதை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் முதியோர் மற்றும் குழந்தைகள் விரைவாகவும், சிரமமின்றியும் தரிசனம் செய்யும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மண்டல கால பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் அதிகபட்சமாக 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 18ம் படி வழியே நிமிடத்துக்கு 80 பக்தர்கள் ஏறிச் செல்கின்றனர். படிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக ஏறவும், முதியோர், குழந்தைகளை கை தூக்கி விடுவதற்கும் போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?