இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

Nov 18, 2024 - 13:45
 0  4
இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். அதோடு, போக்குவரத்து துறை அமைச்சராக பிமல் ரத்நாயக்க, மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன் உள்ளிட்டோரும் அதிபர் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று, புதிய அதிபராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் நிறைவடைய மேலும் 11 மாதங்கள் இருந்தபோதும், புதிய அதிபா் அநுர குமார திசாநாயக நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டது கவனிக்கத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow