ஈரான் ராணுவ ட்ரோன் படைப்பிரிவின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு

ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தின.

Jun 21, 2025 - 15:30
 0  5
ஈரான் ராணுவ ட்ரோன் படைப்பிரிவின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு

தெஹ்ரான்: ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்களைப் பயன்படுத்தின.

இஸ்ரேல் ராணுவத்தின் அறிக்கையின்படி, ‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார். அவரது பெயர் அமின் பௌர் ஜோட்கி. புரட்சிகர காவல்படையின் இரண்டாவது UAV ட்ரோன் படைப்பிரிவின் கமாண்ட் தளபதியாக அவர் பதவி வகித்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கிய ஒன்பது நாட்களில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட 7-வது உயர்மட்ட ஈரானிய தளபதி இவர் ஆவார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow