ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் - நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வர டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்த அவர், ரஷ்யாவுடன் வலிமையான வர்த்தக உறவில் இருக்கும் நாடுகளுக்கு எதிராகவும் வரி விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
What's Your Reaction?