சோளிங்கர் நரசிம்ம சுவாமி கோயிலில் சூர்யா, சிறுத்தை சிவா தரிசனம்
சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா இன்று (நவ.20) சுவாமி தரிசனம் செய்தார்.

அரக்கோணம்: சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா இன்று (நவ.20) சுவாமி தரிசனம் செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை மாதம் பெருவிழா தொடங்கி உள்ள நிலையில், உள்ளூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
What's Your Reaction?