தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கங்​கை​கொண்​டசோழபுரம், தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் ஐப்​பசி மாத பவுர்​ணமியை முன்​னிட்டு மூல​வருக்கு நேற்று அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர்.

Nov 6, 2025 - 06:50
 0  3
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

அரியலூர் / தஞ்சாவூர்: கங்​கை​கொண்​டசோழபுரம், தஞ்​சாவூர் பெரிய கோயி​லில் ஐப்​பசி மாத பவுர்​ணமியை முன்​னிட்டு மூல​வருக்கு நேற்று அன்​னாபிஷேகம் நடை​பெற்​றது. இதில் திரளான பக்​தர்​கள் கலந்து கொண்​டனர். அரியலூர் மாவட்​டம் கங்​கை​கொண்​ட சோழபுரம் பிரகதீஸ்​வரர் கோயி​லில் ஒவ்​வோர் ஆண்​டும் ஐப்​பசி மாத பவுர்​ணமி தினத்​தில் 60 அடி சுற்​றள​வும், 13.5 அடி உயர​மும் கொண்ட மூல​வர் பெரு​வுடை​யாருக்கு 100 மூட்டை அரிசி​யால் சாதம் சமைத்​து, அன்​னாபி ஷேகம் நடை​பெறு​வது வழக்​கம்.

அதன்​படி, நேற்று காலை முதல் சாதம் சமைக்​கப்​பட்டு லிங்​கத்​தின் மீது சாற்​றப்​பட்டு, பலகாரங்​கள், பழங்​கள், பூக்​கள் கொண்டு அலங்​கரிக்​கப்​பட்​டது. லிங்​கத்​தின் மீது சாற்​றப்​படும் ஒவ்​வொரு சாத​மும் லிங்​கத்​தின் தன்​மை​யைப் பெறும் என்​பதும், இதனால் ஒரே நேரத்​தில் கோடிக்​கணக்​கான சிவலிங்​கங்களை தரிசிக்​கும் புண்​ணி​யம் கிடைக்​கும் என்​பதும் நம்​பிக்​கை. தொடர்ந்​து, மூல​வருக்கு தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டு, மூல​வர் மீது சாற்​றப்​பட்ட சாதம் பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow