திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்​மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய, பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Jun 7, 2025 - 06:10
 0  4
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்​மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று 5 தேரோட்டம் நடைபெற்றது. திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய, பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 30-ம் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, ஜூன் 4-ம் தேதி இரவு சகோபுர வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

மற்றொரு முக்கிய நிகழ்வான 5 தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு செண்பக தியாகராஜ சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow