திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7-ல் காலை 6.15 - க்கு கும்பாபிஷேகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இதில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை முடிவு செய்வதில் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தை கோயில் நிர்வாகம் நேற்று மாலை அறிவித்தது.
What's Your Reaction?