மாசி மகம்: பழநி முருகன் கோயிலில் 1008 சங்கு பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாசி மகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் புதன்கிழமை (மார்ச் 12) நண்பகல் நடைபெற்றது.

பழநி: மாசி மகத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் புதன்கிழமை (மார்ச் 12) நண்பகல் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாசி மகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் இன்று (மார்ச் 12) காலை வெள்ளி சங்கு உட்பட 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, கும்ப கலசங்களில் நீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
What's Your Reaction?