குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்க்க வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை

குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்த்​தால், அவர்​களது வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்​கும் என்று காஞ்சி காமகோடி பீடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்​கி​யுள்​ளார்.

Nov 24, 2024 - 10:55
 0  4
குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்க்க வேண்டும்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை

சென்னை: குழந்தைகளை தெய்வீக சூழலில் வளர்த்​தால், அவர்​களது வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்​கும் என்று காஞ்சி காமகோடி பீடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளுரை வழங்​கி​யுள்​ளார். கர்நாடக மாநிலத்​தில் கடந்த 3 வார காலமாக விஜய யாத்​திரை​யில் இருக்​கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 17-ம் தேதி எடநீர் மடத்​துக்கு விஜயம் செய்​தார்.

மடத்​தின் சார்​பில் பீடா​திபதி ஸ்ரீ சச்சி​தானந்த பாரதி சுவாமிகள், அவரை வரவேற்​றார். பின்னர் குக்கே சுப்​பிரமண்யா கோயில் உள்ளிட்ட கோயில்​களில் சுவாமி தரிசனம் செய்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், கடந்த 20-ம் தேதி உடுப்பி வந்தடைந்​தார். ஸ்ரீ கிருஷ்ணா மடத்​தின் சார்​பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. மத்வ சம்பிர​தாயப்படி சுவாமிகளுக்கு புஷ்பாஞ்​சலி, பொரி​யிட்டு மரியாதை செய்​யப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow