சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்
திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருக்குடை உபய உற்சவ ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை: திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருக்குடை உபய உற்சவ ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருமலை திருப்பதி ஏழுமலயான் கோயில் பிரம்மோற்சவ காலத்தில் தமிழகத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர்மாலை, வெண்பட்டு திருக்குடைகள் கருடச் சேவைக்காக சமர்ப்பிக்கப்படும்.
அதன்படி திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் - விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக, ஒவ்வோர் ஆண்டும் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான திருக்குடை ஊர்வலத்தின் தொடக்க விழா பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்றது.
What's Your Reaction?