திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி

திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவின் நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

Jan 19, 2025 - 01:40
 0  4
திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி இசையஞ்சலி

தஞ்சாவூர்: திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழாவின் நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், தியாகப் பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் முக்தி அடைந்தார். அங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு தியாகராஜர் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டு தியாகராஜ சுவாமிகளின் 178-வது ஆராதனை விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விழாவைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை இசைக் கலைஞர்களின் வாய்ப்பாட்டு, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow