சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய நிறுவனங்கள் தொடக்கம்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்
வேத பாடசாலை, பாரதிய வித்யாலயா தொடக்கப் பள்ளி உட்பட சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய நிறுவனங்களை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை: வேத பாடசாலை, பாரதிய வித்யாலயா தொடக்கப் பள்ளி உட்பட சென்னை சம்ஸ்கிருத கல்லூரியில் 4 புதிய நிறுவனங்களை, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள சென்னை சம்ஸ்கிருத கல்லூரியை விரிவாக்கம் செய்யும் வகையில், பாரதிய மேம்பாட்டு மையம் சார்பில், ‘ராமரத்னம் பாரதிய வித்யாலயா’ தொடக்க பள்ளி, ‘ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி வேத பாடசாலை’, தகுதியுள்ள அறிஞர்களை கண்டறிந்து அவர்களை சிறந்த அறிஞர்களாக உருவாக்க ‘கிருஷ்ணசாமி ஐயர் சாஸ்திர வாரிதி’ நிறுவனம், சைவத்தின் புனித மரபுகளை நிறுத்த ‘சைவ ஆகமத்துறை’ எனும் புதிய துறை ஆகிய 4 நிறுவனங்கள் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
What's Your Reaction?