சபரிமலையில் அதிக குளிர் - பக்தர்களுக்கு மூலிகை சுடுதண்ணீர் விநியோகம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பாக கடும் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து புல்மேடு மற்றும் முக்குழி வனப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அனைவரும் தற்போது எருமேலி, பம்பை வழியே சந்நிதானத்துக்குச் சென்று வருகின்றனர்

Dec 3, 2024 - 21:50
 0  7
சபரிமலையில் அதிக குளிர் - பக்தர்களுக்கு மூலிகை சுடுதண்ணீர் விநியோகம்

குமுளி: சபரிமலையில் நிலவி வரும் அதிக குளிரில் இருந்து பக்தர்களைக் காக்க தேவசம்போர்டு சார்பில் மூலிகை சுடு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பாக கடும் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து புல்மேடு மற்றும் முக்குழி வனப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அனைவரும் தற்போது எருமேலி, பம்பை வழியே சந்நிதானத்துக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் பம்பை நதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பின் அடிப்படையில் பக்தர்கள் குளித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow