ரம்ஜான் பண்டிகை: திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை  பகிர்ந்து கொண்டனர்.  

Mar 31, 2025 - 18:20
 0  4
ரம்ஜான் பண்டிகை: திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

மதுரை: ரம்ஜான் பண்டிகையையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ரம்ஜானையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் திருப்பரங்குன்றம் மலையில் 300 அடிக்கு மேல் இருக்கும் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா செல்லும் பாதையிலுள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி, இன்று (மார்ச் 31) ரம்ஜானையொட்டி, சுமார் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலை மேலுள்ள நெல்லித்தோப்பு பகுதி திடலுக்கு நேற்று சென்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow