புதுச்சேரியில் மாசிமக திருவிழா: கூடுதல் பேருந்துகளை இயக்க ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரியில் மாசிமக திருவிழாவையொட்டி முக்கியப் பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும், சிசிடிவி பொருத்திக் கண்காணிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனுமதி பெற்றே பேனர் வைக்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் அவற்றை அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் மாசிமக திருவிழாவையொட்டி முக்கியப் பகுதிகளிலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும், சிசிடிவி பொருத்திக் கண்காணிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனுமதி பெற்றே பேனர் வைக்க வேண்டும். அனுமதி இல்லாவிட்டால் அவற்றை அகற்றவும் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமகத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். மாசி மகத்தில் புதுச்சேரி கடற்கரை, நதி உள்ளிட்ட நீர்நிலைகளில் புதுச்சேரி மட்டுமல்லாது தமிழகப் பகுதிகளிலிருந்தும் திருக்கோயில்களின் உற்சவர்கள் எழுந்தருளித் தீர்த்தமாடி அருள்பாலிக்கும் விழா புதுவை மாநிலத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசியில் நடைபெறும் இத்திருவிழா வரும் 12-ஆம் தேதி திருக்காஞ்சியில் தொடங்குகிறது. அதையடுத்து வரும் 14-ம் தேதி புதுச்சேரி வைத்திக்குப்பம், வீராம்பட்டிணம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.
What's Your Reaction?