பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! - ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம்

‘கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணை முட்ட பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். செவ்வாய்க்கிழமை (மே.12) அதிகாலை 6 மணி அளவில் மதுரை - ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்த நிகழ்வின்போது லட்சோப லட்சம் மக்கள் கள்ளழகரை தரிசித்து வழிபட்டனர்.

May 12, 2025 - 10:00
 0  4
பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்! - ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம்

மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 5-ம் நாளான இன்று சித்ரா பவுர்ணமியன்று அதிகாலை 5.59 மணியளவில் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என விண்ணதிர கோஷம் எழுப்பினர்.

மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மே 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுக்காக அழகர் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு மே 10-ம் தேதி புறப்பாடானார். மே 11-ல் மாநகர் எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் எதிர்சேவை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை வரவேற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow