சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தர்கள்!
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும் தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருநள்ளாறு: திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இன்று சனிப்பெயர்ச்சி நிகழ்ந்த நிலையில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும் தரிசனத்துக்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் மரபுபடி வாக்கிய பஞ்சாங்க முறையின்படியே சனிப்பெயர்ச்சி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இக்கோயிலில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகமும் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
What's Your Reaction?