சரஸ்வதி புஸ்கரம்: சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்துக்கு சிறப்பு ரயில்
பத்ரிநாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சரஸ்வதி புஸ்கரம் விழாவுக்கு தமிழக மக்களை அழைத்து செல்லும் வகையில், பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்-க்கு சிறப்பு ரயில் மே 8-ம் தேதி இயக்கப்பட உள்ளது.

சென்னை: பத்ரிநாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சரஸ்வதி புஸ்கரம் விழாவுக்கு தமிழக மக்களை அழைத்து செல்லும் வகையில், பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், சென்னையில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத்-க்கு சிறப்பு ரயில் மே 8-ம் தேதி இயக்கப்பட உள்ளது.
இது குறித்து உத்தராகண்ட் மாநில சுற்றுலா நிறுவன மக்கள்தொடர்பு அதிகாரிகள் விரேந்திர சிங் ராணா, சுனில் ராஜூ (சென்னை) ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியது:“உத்தராகண்ட் சுற்றுலா கழகம், இந்திய ரயில்வே பாரத் கவுரவ் ரயில் சார்பில், சரஸ்வதி புஷ்கரத்தை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து பத்ரிநாத், கேதர்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் சரஸ்வதி ஆறு ஓடுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு வரும் மே மாதத்தில் சரஸ்வதி புஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக பயணிகள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
What's Your Reaction?