சாதி அடையாளமின்றி கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

கோயில் திருவிழாக்களில் சாதிக்கு முக்கியத்துவம் தராமல், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் என்ற பெயரில் சாதி அடையாளம் எதுவுமின்றி விழாக்களை நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

Mar 29, 2025 - 20:50
 0  5
சாதி அடையாளமின்றி கோயில் திருவிழாக்களை நடத்த அறநிலையத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் திருவிழாக்களில் சாதிக்கு முக்கியத்துவம் தராமல், ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் என்ற பெயரில் சாதி அடையாளம் எதுவுமின்றி விழாக்களை நடத்த வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா புதுப்பட்டி கிராமத்தில் உள்ள துலுக்க சூடாமணியம்மன் கோயில் தேர் திருவிழாவில், பட்டியல் சமுதாய மக்களுக்கும் ஏதாவது ஒருநாள் ஒதுக்கி இத்திருவிழாவை நடத்த அனுமதி வழங்கக்கோரி பெரியசாமி என்ற நீலவண்ணத்து நிலவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow