சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக ஒரு மணி நேரம் முன்பே நடை திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று(வெள்ளி) மாலை மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (வெள்ளி) மாலை மண்டல கால பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இங்கு மண்டல, மகரபூஜை வழிபாடுகள் மிகவும் விசேஷமாக நடைபெறும் இதற்காக உள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர். இதன்படி நாளைமுதல் (சனி) மண்டல காலத்துக்கான பூஜை வழிபாடுகள் தொடங்க உள்ளது.
What's Your Reaction?