மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி - புனித நீராடிய பக்தர்கள்
மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இன்று (நவ.15) சிறப்பான வகையில் நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் இன்று (நவ.15) சிறப்பான வகையில் நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே காசிக்கு நிகராக இத்தலம் கருதப்படுகிறது. அதனடிப்படையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.
What's Your Reaction?