திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: அரோகரா முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் இன்று (அக்.27) மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக் கணக் கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம் ஹாரம் நடைபெற்றது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி விழாவில் இன்று (அக்.27) மாலை கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் திருநாளான இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளியதும் பூஜைகள் தொடங்கின.
What's Your Reaction?