கிராம பூசாரியாக இளைஞரை தேர்வு செய்த ‘மைசூர் காளை’ - கிருஷ்ணகிரி அருகே கோயிலில் நூதனம்

கிருஷ்ணகிரி அருகே புதிதாகக் கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோயில் பூசாரி தேர்வு நடந்தது. இதில், பாரம்பரிய வழக்கப்படி, ‘மைசூர் காளை’ மூலம் கோயில் பூசாரியாக 22 வயது இளைஞர் தேர்வானார்

Jul 8, 2025 - 14:15
 0  3
கிராம பூசாரியாக இளைஞரை தேர்வு செய்த ‘மைசூர் காளை’ - கிருஷ்ணகிரி அருகே கோயிலில் நூதனம்

கிருஷ்ணகிரி அருகே புதிதாகக் கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோயில் பூசாரி தேர்வு நடந்தது. இதில், பாரம்பரிய வழக்கப்படி, ‘மைசூர் காளை’ மூலம் கோயில் பூசாரியாக 22 வயது இளைஞர் தேர்வானார்.

கிருஷ்ணகிரி அருகே மேலுமலை ஊராட்சிக்கு உட்பட்ட சாம்பல்பள்ளம் கிராமத்தில் சுயம்பு முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே கிராம மக்கள் சார்பில், வெக்காளியம்மன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 5 நாட்களாக மங்கள இசை, மகா கணபதி பூஜை, ஹோமம், கொடி ஏற்றம், கலசங்களில் புனித நீர் எடுத்து வருதல், கோ பூஜை, வாஸ்து பூஜை, யாக சாலை பூஜைகள், பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை குடமுழுக்கு விழா நடந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow