திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்

உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

Jan 2, 2025 - 14:05
 0  4
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்

திருமலை: உலக பணக்கார கடவுளாக பக்தர்களால் போற்றி வழிபடப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு, கடந்த 2024-ம் ஆண்டில் 1,365 கோடி ரூபாயை உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுவே பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் சுமார் 90 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பக்தர்கள் ஏழுமலையானை நீண்ட வரிசைகளில் காத்திருந்து தரிசிப்பர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow