யேசுதாஸின் `சர்வேசா'!
பெங்களூரூவைச் சேர்ந்த பிரபல வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான மனோஜ் ஜார்ஜ் மற்றும் கர்னாடக இசைப்பாடகரும் அருட்தந்தையுமான பால் பூவத்திங்கள் (கேஜே.யேசுதாஸின் சீடர்) ஆகியோரின் முன்முயற்சியில் `சர்வேசா' என்னும் இசைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பெங்களூரூவைச் சேர்ந்த பிரபல வயலின் கலைஞரும் இசையமைப்பாளருமான மனோஜ் ஜார்ஜ் மற்றும் கர்னாடக இசைப்பாடகரும் அருட்தந்தையுமான பால் பூவத்திங்கள் (கேஜே.யேசுதாஸின் சீடர்) ஆகியோரின் முன்முயற்சியில் `சர்வேசா' என்னும் இசைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிரபல சம்ஸ்கிருத அறிஞர் பேராசிரியர் பி.சி. தேவஸ்ஸியா எழுதியிருக்கும் `கிறிஸ்துபாகவதம்' படைப்பிலிருந்து எடுக்கப்பட்ட வரிகளுக்கு மனோஜ் ஜார்ஜ் இசையமைக்க, கே.ஜே.யேசுதாஸ் இந்தப் பாடலைப் பாடியிருப்பது, தேவதூதனுக்கு, புவியிலிருந்து விடுக்கப்படும் அழைப்பு அனுபவத்தைத் தருகிறது.
தொடக்க இசைக்குப் பிறகு, நடபைரவி ராகத்தின் ஜீவ ஸ்வரங்களை தன்னுடைய இறைஅனுபூதியுடன் கூடியகுரலில் தொட்டுக் காட்டுகிறார் யேசுதாஸ். `எங்கள் பிதாவே, அனைவருக்கும் ஆண்டவரே, மேலே பரலோகத்தில் வாழ்பவரே, உமது நாமம் பரிசுத்தமானது, உமது ராஜ்யம் வரட்டும்' என்னும் பொருளைக் கொடுக்கும் `அஸ்மாகம் தாதா சர்வேசா / ஸ்வர்க்க லோகம் அதிஷ்டிதா' வரிகளை யேசுதாஸ் பாட, நூறு பாதிரியார்கள், நூறு கன்னியாஸ்திரிகளின் சேர்ந்திசைக் குரலும் யேசுதாஸின் குரலோடு ஐக்கிய மாகி, கேட்டுக் கொண்டிருக்கும் நம்மையும் பாடலோடு ஒன்றிணைய வைக்கிறது.
What's Your Reaction?