ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு ரூ.430 கோடியில் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு
அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை: “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில்களுக்கு அரசு சார்பில் நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று 2022 -2023 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.100 கோடி, 2024-2025 100 கோடி என்று ரூ.300 கோடியை 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நிதியை வழங்கியுள்ளார். அந்த வகையில் ரூ.300 கோடியோடு உபயதாரர் நிதி ரூ.60 கோடி மற்றும் திருக்கோயில் நிதி ரூ.70 கோடி என சேர்த்து ரூ.430 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் வாயிலாக இதுவரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட 49 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது” என்று சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 18) வினா - விடை நேரத்தின்போது, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மானம்பாடி நாகநாதசுவாமி கோயில் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த கோயில் மூன்று துறைகளின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு இன்றும் திருப்பணி நடைபெறாமல் உள்ளது. இந்த ஆண்டு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
What's Your Reaction?