நாமக்கல் கமலாலய குளத்தில் வரும் 12ல் தெப்பதேர் திருவிழா - அலங்கார பணிகள் தீவிரம்
நாமக்கல்லில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள தெப்பதேர் திருவிழாவை முன்னிட்டு 150 இரும்பு பேரல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தெப்பத்தேர் கமலாலய குளத்தில் விட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

நாமக்கல்: நாமக்கல்லில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள தெப்பதேர் திருவிழாவை முன்னிட்டு 150 இரும்பு பேரல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தெப்பத்தேர் கமலாலய குளத்தில் விட்டு வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. இம்மலை அடிவாரத்தில் தெற்கு புறத்தில் புாரண கால சிறப்பு மிக்க கமலாலயக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்தின் ஒரு பகுதியில் ஆஞ்சநேயர் பாத சுவடுகள் உள்ளன. தவிர, நாமக்கல் மலைக்கு மேற்கு புறத்தில் நாமகிரித் தாயார் உடனுரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில், அதன் எதிரில் மலையையும் தெய்வங்களையும் வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் ஸ்வாமியும், மலையின் கிழக்குப்பகுதியில் அரங்கநாயகித் தாயார் உடனுரை ரங்கநாதர் கோயிலும் அமைந்துள்ளன.
What's Your Reaction?