காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்பு
காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காஞ்சி சங்கர மடத்தில் திரளான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்து இளைய பீடாதிபதியிடம் ஆசி பெற்றனர்.

சென்னை / காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காஞ்சி சங்கர மடத்தில் திரளான பக்தர்கள் பல மாநிலங்களில் இருந்து வந்திருந்து இளைய பீடாதிபதியிடம் ஆசி பெற்றனர்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 71-வது பீடாதிபதியாக ரிக் வேத விற்பன்னர் பிரம்மஸ்ரீ துட்டுசத்ய வெங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச
சர்மா திராவிட் தேர்வு செய்யப்பட்டார். அட்சய திருதியை தினத்தில் அவர் சந்நியாஸ்ரம தீட்சை பெற உள்ளார் என்று காஞ்சி சங்கர மடத்தின் கார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரி முன்னதாக தெரிவித்திருந்தார்.
What's Your Reaction?