பழநி முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா காப்புக் கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை விழாவன்று பக்தர்கள் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் கார்த்திகை திருவிழா காப்புக் கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. வரும் 13-ம் தேதி நடைபெற உள்ள திருக்கார்த்திகை விழாவன்று பக்தர்கள் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கார்த்திகைத் திருவிழா நேற்று மாலை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, தண்டாயுதபாணி சுவாமி, விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவார பாலகர்கள், மயிலுக்கு காப்புக் கட்டப்பட்டது. முன்னதாக முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
What's Your Reaction?