விமானத்தில் வருவதால் உச்சத்தில் முருங்கை விலை: நகரப்புறங்களில் கிலோ ரூ.400 வரை விற்பனை

தமிழக உணவு பாரம்​பரி​யத்​தில் சாம்​பாருக்கு முக்கிய இடம் உள்ளது. அதிலும் முருங்​கைக்​காய் சாம்​பாருக்கு முக்​கி​யத்துவம் அதிகம்.

Dec 8, 2024 - 07:35
 0  6
விமானத்தில் வருவதால் உச்சத்தில் முருங்கை விலை: நகரப்புறங்களில் கிலோ ரூ.400 வரை விற்பனை

சென்னை: தமிழக உணவு பாரம்​பரி​யத்​தில் சாம்​பாருக்கு முக்கிய இடம் உள்ளது. அதிலும் முருங்​கைக்​காய் சாம்​பாருக்கு முக்​கி​யத்துவம் அதிகம். பச்சிளம் குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்​மார்​களின் ஊட்டச்​சத்து குறைபாட்டை முருங்கை நீக்கு​கிறது. கோவை அரசு தோட்​டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளி​யிட்​டுள்ள தகவல் தொகுப்​பில், 100 கிராம் முருங்​கைக் காயில் கால்​சியம் 30 மில்லி கிராம், மக்னீசியம் 24 மி.கி. ஆக்சாலிக் அமிலம் 101 மி.கி. பாஸ்​பரஸ் 110 மி.கி. பொட்​டாசியம் 259 மி.கி, கந்தகம் 137 மி.கி. வைட்​ட​மின் பி-கோலின் 423 மி.கி. வைட்​ட​மின் சி 120 மி.கி. இருப்​பதாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் கடந்த ஒரு மாதமாக முருங்​கைக் காயின் விலை உயர்ந்து வருகிறது. கோயம்​பேடு சந்தை​யில் செப்​டம்பர் மாதத்​தில் கிலோ ரூ.10 ஆக விலை வீழ்ச்சி அடைந்​திருந்​தது. இந்நிலை​யில் தற்போது மொத்த விலை​யில் ரூ.100 முதல் ரூ.300 வரையிலும், சில் லறை விற்​பனை​யில் ரூ.250 முதல் ரூ.400 வரையிலும் விற்​கப்​பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow