‘புதிய விதிமுறைகளால் நகைக் கடன் பெற முடியாமல் மக்கள் அவதி’

ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக் கடன் பெறவோ, மறு அடமானம் வைக்கவோ முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர் என்று கூறியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்தப் புதிய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Mar 29, 2025 - 19:15
 0  6
‘புதிய விதிமுறைகளால் நகைக் கடன் பெற முடியாமல் மக்கள் அவதி’

சென்னை: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் நகைக் கடன் பெறவோ, மறு அடமானம் வைக்கவோ முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர் என்று கூறியுள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்தப் புதிய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.குணசேகரன், சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கி என்பது நாட்டின் கடைகோடியில் உள்ள ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாத அமைப்பு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. ரிசர்வ் வங்கி அண்மையில் அமல்படுத்திய புதிய கொள்கையால், விவசாயிகள், ஏழை, நடுத்தர மக்களுக்கு, அவசரத் தேவைக்கு நகை ஈட்டுக் கடன் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow