விரைவில் பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சும் திறன் இந்தியாவிடம் உள்ளது: அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ்

அமெரிக்க முதலீட்​டாள​ரும், நிதி விமர்​சகரு​மான ஜிம் ரோஜர்ஸ் அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: உலகின் பாது​காப்​பான முதலீட்​டுக்​கான தளமாக மாற இந்​தியா தயா​ராகி வரு​கிறது.

May 13, 2025 - 08:20
 0  3
விரைவில் பொருளாதாரத்தில் சீனாவை விஞ்சும் திறன் இந்தியாவிடம் உள்ளது: அமெரிக்க முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ்

புதுடெல்லி: அமெரிக்க முதலீட்​டாள​ரும், நிதி விமர்​சகரு​மான ஜிம் ரோஜர்ஸ் அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: உலகின் பாது​காப்​பான முதலீட்​டுக்​கான தளமாக மாற இந்​தியா தயா​ராகி வரு​கிறது. வரும் ஆண்​டு​களில் பொருளா​தா​ரத்​தில் சீனாவை விஞ்சி சிறப்​பாக செயல்​படக்​கூடிய திறன் இந்​தி​யா​விடம் உள்​ளது. பல தசாப்​தங்​களாக முதலீட்டு உலகில் இருக்​கிறேன். வாழ்க்​கை​யில் முதல் முறை​யாக டெல்லி மக்​கள் பொருளா​தா​ரத்​தின் அடிப்​படைகளை புரிந்​து​கொள்​வதை பார்க்​கிறேன்.

இந்​தியா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. டெல்​லி​யில் உள்ள மக்​கள் என்ன செய்ய வேண்​டும் என்​பதை புரிந்​து​கொண்டு அதனை செய்ய முயற்​சிக்​கிறார்​கள். அது இந்​தி​யா​வுக்​கும் உலகுக்​கும் அற்​புத​மாக இருக்​கும். இந்​தியா உண்​மை​யில் முழு உலகத்​துட​னும் திறந்த வர்த்​தகத்​தில் ஈடுபட முடிந்​தால், அதனால் நாட்​டின் எதிர்​காலம் நீங்​கள் நம்​ப​முடி​யாத அளவுக்கு சிறப்​பான​தாக இருக்​கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow