தோல்வியில் கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும்: ஜோஹோ இணை நிறுவனர் கருத்து
தோல்வியில் கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும். எனவே, தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்று ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு கூறினார்.

சென்னை: தோல்வியில் கிடைக்கும் அனுபவம் வெற்றியைப் பெற பயனுள்ளதாக இருக்கும். எனவே, தோல்வியைக் கண்டு துவளக் கூடாது என்று ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் குமார் வேம்பு கூறினார். நகரத்தார் வர்த்தக சபை (என்சிசி) மற்றும் இளம் தொழில் முனைவோரைக் கண்டறிதல் (யெஸ்) அமைப்பு சார்பில் ‘லான்ச் பேட் - 2025’ என்ற கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில், இளைஞர்கள் குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து குடும்பத் தொழிலையே கவனிப்பதா அல்லது சுயமாக தங்களுக்கென ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்குவதா அல்லது வேலைக்கு செல்வதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான இளம் தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?