தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

Jul 18, 2025 - 14:50
 0  5
தி.மலை கோயிலில் பிரேக் தரிசனம், ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: சேகர்பாபு தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow