சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கம்: தேவசம் போர்டு செயலர் தகவல் 

சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக நவ. 16-ல் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது.

Oct 31, 2025 - 07:55
 0  11
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கம்: தேவசம் போர்டு செயலர் தகவல் 

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக நவ. 16-ல் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. ஒரு மண்​டலம் விரதமிருந்து ஐயப்​பனை தரிசனம் செய்ய ஏராள​மாள பக்​தர்​கள் ஆர்​வம் காட்டி வரு​வ​தால் மண்​டல, மகர பூஜை காலங்​களில் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் சபரிமலைக்கு வரு​கின்​றனர். இதையொட்​டி, பக்​தர்​களுக்கு பல்​வேறு வசதி​கள் ஏற்​பாடு செய்​யப்பட உள்​ளன. இதற்​கான ஆலோ​சனைக் கூட்​டம் திரு​வனந்​த​புரத்​தில் தேவசம் அமைச்​சர் வி.என்​.​வாசவன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதுகுறித்து தேவசம் போர்டு செய​லர் எம்​.ஜி.​ராஜ​மாணிக்​கம் ‘இந்து தமிழ் திசை’ செய்​தி​யாளரிடம் கூறிய​தாவது: பக்​தர்​கள் தற்​போது ஆன்​லைன் மூலம் சேவை​களைப் பெற்று வரு​கின்​றனர். அவர்​கள் வசதிக்​காக ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​துடன் கூடிய, பலமொழி தகவல் தொடர்பு செயலி விரை​வில் அறி​முகப்​படுத்​தப்​பட​வுள்​ளது. இதில், தரிசனம், தங்​கும் வசதி, அவசரத் தேவை, மருத்​துவ வசதி, காலநிலை உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் தெரிந்து கொள்​ளலாம். அதில் உள்ள எண்​களில் தொடர்பு கொண்​டும் பலனடைய​லாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow