சிதம்பரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சிதம்பரத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர்: சிதம்பரத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் வடக்கு மெயின் மெயின் ரோடு பெரிய அண்ணா குளம் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 55 ஆண்டுகளாக வெகு விமரிசையாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 56 ஆண்டுக்கான திருவிழா கோயிலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான நேற்று இரவு (ஜூன்.14) கோயிலுக்கு அருகே உள்ள பெரிய அண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிதம்பரம் வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது.
What's Your Reaction?