வலுக்கும் மோதல்: ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அன்று ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது.

டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
What's Your Reaction?