‘வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்’ - அமெரிக்கா

அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

Apr 29, 2025 - 18:00
 0  3
‘வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும்’ - அமெரிக்கா

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ஸ்காட் பெசென்ட், “எங்கள் ஆசிய வர்த்தக கூட்டாளிகளுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்து வருகின்றன. துணைத் தலைவர் ஜே.டி.வான்ஸ் கடந்த வாரம் இந்தியாவில் இருந்தார். கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்துப் பேசினார். கொரிய குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடந்ததாக நான் குறிப்பிட்டுள்ளேன். மேலும், ஜப்பானுடன் நாங்கள் கணிசமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என்று நான் நினைக்கிறேன்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow